தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க

தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க

தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளர

 • கறிவேப்பிலையை அரைத்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தினமும் தேய்த்து வர, தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளரும்.
 • காரட்டையும் எலுமிச்சம் சாற்றையும் தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக கருப்பாக வளரும்.
 • மரிகொழுண்டு இலையையும், செம்பருத்தி இலையையும் அரைத்து, தலைக்கு தடவி குளித்து வந்தால், செம்பட்டை முடி கறுப்பாகும்.


தலைமுடி உதிர்வதை தடுக்க 

 • வெந்தையம் மற்றும் குன்றிமணியை போடி செய்து தேங்காய் எண்ணையில் ஊறவைத்து, தினமும் தேய்த்து வர, தலைமுடி  உதிர்வது நிற்கும்
 • நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் பொடியை தண்ணிரில் கலந்து இரவில் காய்ச்சி, காலையில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குளித்து வர, தலைமுடி உதிர்வது அறவே நிற்கும்.


வழுக்கை தலையில் முடி வளர 

 • மருதாணி பூவை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து, வெய்யிலில் காயவைத்து, தினமும் தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும்.
 • நேர்வாளங் கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு அரைத்து தடவி வர சொட்டை தலையில் முடி முளைக்கும் 
 • கீழாநெல்லி இலை  மற்றும் வேரை பொடியாக்கி, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால், வழுக்கை தலையில் முடி வளரும்.


பேன்,பொடுகு தொல்லை நீங்க மருந்து 

 • தினமும் தூங்கும்பொழுது செம்பருத்தி இலையை முடியில் வைத்துக்கொண்டு தூங்கினால் பேன், பொடுகு போகும் 
 • மலை வேம்பு இலையை அரைத்து தலையில் பூசி வர பேன், பொடுகு தொல்லை போகும்.
 • துளசி மற்றும் வேப்ப இலையை பால்விட்டு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், பேன், பொடுகு தொல்லை போகும்.
 • சீதாப்பழ விதையை காயவைத்து, பொடியாக்கி, சீயக்காயோடு கலந்து தேய்த்து குளித்து வர, பேன் போகும்.
 • வேப்பிலை தண்ணிரில் இரவில் ஊறவைத்து, காலையில் தலைக்கு குளிக்கும்போது உபயோகபடுத்தி வந்தால், பேன் போகும்.


நரைமுடி கருப்பாக 

 • கறிவேப்பிலை நன்றாக அரைத்து, தினமும் வெறும் வயிற்றில் ஒரு கவளம் சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் இளநரை போயி போய்விடும்
 • கசகசா 100 கிராம், அதி மதுரம் 100 கிராம் கலந்து நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு, குளிக்கும் முன் பசும்பாலில் பொடியை கலந்து தலைக்கு தடவி, அரை மணி நேரம்  கழித்து தொடர்ந்து குளித்து வந்தால், நரை முடி கறுப்பாகும்
 • தாமரைப்பூ கஷாயம் தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் நரைமுடி கறுப்பாகும்.
 • நெல்லிக்கையை காயவைத்து, பவுடர் ஆக்கி, எண்ணெயுடன் கலந்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை போகும்.
 • முளைக்கீரை ஒரு நல்ல நரைமுடி கருப்பாக உதவும் கீரை. அடிக்கடி சாப்பிடுங்கள்
 • செம்பருத்தி பூ, ஆலமரத்தின் கொழுந்து மற்றும் வேர் ஆகியவற்றை போடி செய்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தேய்த்து வர, நரைமுடி நன்றாக கருப்பாக வளரும்.


keyword: தலைமுடி அடர்த்தியாக வளர, தலைமுடி பராமரிப்பு, தலைமுடி வளர, தலைமுடி உதிர்தல், தலைமுடி கருப்பாக, நரைமுடி கருப்பாக, நரைமுடி மறைய, நரைமுடி, வழுக்கையில் முடி வளர, வழுக்கையான தலையில் முடி வளர, முடி உதிர்வை தடுக்க, முடி அடர்த்தியாக வளர, முடி உதிராமல் தடுக்க, முடி நீளமாக வளர, முடி கருமையாக, முடி வளர்ச்சி, பேன் தொல்லை நீங்க, பேன் மருந்து,

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share
Share