Thiruppavai திருப்பாவை 

Thiruppavai திருப்பாவை
Thaniyan
Anna vayaRpudhuvai aandaaL arangaRkup அன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப்
Pannu thiruppaavaip palpadhiyam, Innisaiyaal பன்னு திருப் பாவைப் பல் பதியம்! – இன்னிசையால்
paadikkoduththaaL naRpaamaalai, Poomalai பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
Soodikk koduththaaLaich sollu சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
Soodik koduththa sudark kodiyE, tholpaavai சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை
Paadi aruLavalla palvaLaiyaai – Naadi Nee பாடி அருள வல்ல பல் வளையாய் – நாடி நீ
VengadavaRku ennai vidhi onRa immaaRRam வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்
Aangadavaa vaNNamE nalgu நாங் கடவா வண்ணமே நல்கு!
Thiruppavai in English Thiruppavai in Tamil (திருப்பாவை)
1. Margazhi Thingal or Margali Thingal 1. மார்கழித் திங்கள்
Maargazhi-th thingal madhiniraindha nannalal மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
Neeradap pothuveer pothumino nerizhayeer! நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
Seermalgum aaipadi selvachirumeergal சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
Kooerval kodum thozhilam Nandagopan kumaran கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
Er aarndha kanni Yosadai ilam singam ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
Kaar mein-ch-chengan kadhir madhiyam pol mukathan கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
Narayanane namakke parai tharuvaan நாராயணனே நமக்கே பறை தருவான்
Paaror pugazha-p-padindul-el or empaavaai பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
2. Vaiyathu Vazhvirgal 2. வையத்து வாழ்வீர்காள்!
Vaiyathu Vaazhveerkaaal! Naamum nam paavaiku வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
Seyyum kirisaigal keleero paar-k-kadalul செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
Payya-th-thuyinra parama adi paadi பையத் துயின்ற பரமனடி பாடி
Ney-unnom paal unnom! Naatkaale neeraadi நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
Mai-ittu ezhuthom, malar ittu naam mudiyom மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
Seyyaadana seyyom; thee kuralai senrodhom செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
Aiyamum pichayyum aanthanayyum kaikaati ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
Uyyumaaru enni uganthu-el or em paavaai. உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
3. Oongi ulagalandha 3. ஓங்கி உலகளந்த 
Ongi ulagalanda uthaman per paadi ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
Naangal nam paavaiku chaatri neeradinaal நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
Theenginri nadellaam thingal mummaari peidu தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
Ongu peru sennal oodu kayal ugala ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
Poomkuvalai-p-podhil porivandu kannpaduppa பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
Thengaade pukkirundu seertha mulai patri தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
Vaanga-k-kudam niraikkum vallal perum pasukkal வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
Neengade selvam niraindhu-el or em paavaai. நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
4. Azhi mazhai kanna 4. ஆழிமழைக் கண்ணா
Aazhi mazhai kanna! Onrum nee kai karavel ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்
Aazhiyul pukku mugundhu koda aathu, ari ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
Oozhimudalvan uruvam pol mei karuthu ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்
Paazhi am tholudai Padmanabhan kaiyil பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்
Aazhipol minni valampuripol minru adhirndhu ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
Thaazhaade Sarngaam udhaitha saramazhai pol தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
Vaazha ulaginil peidhidaai; naangalum வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
Maargazhi neerada magizhndu-el or em paavaai. மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
5. Mayanai 5. மாயனை 
Maayanai mannu vada Madhurai maindhanai மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
Thuyao-peruneer Yamunai-t-thuraivanai தூய பெருநீர் யமுனைத் துறைவனை
Aayar kulathinil thonrum mani vilakkai ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
Thaayai kudal vilakkam seida Dhamodharanai தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
Thooyomaai vandhu naam thoomalar thoovi-t-thozhudhu தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
Vaayinaal paadi manatthinaal sendhikka வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
Poya pizhayum pugutharuvaan ninranavum போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
Theeyinil thoosaakum seppu-el or empaavaai தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
6. Pullum Silambina kaan 6. புள்ளும் சிலம்பின காண்
Pullum sillambina kaan; pull araiyan koilil புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
Vellai vili sangin peraravam kettilaiyo வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
Pillaai! ezhundirai peymulai nanjundu பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
Kalla-ch-chakatam kalallazhi-k-kaalochi கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
Vellathu aravil thuyil amarandha vithhinai வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
Ullathuk kondu munivarkalum yogikalum உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
Mella ezhundu ‘Hari’ enra per aravam மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
Ullam pukundhu kulirndhu-el or empaavaai உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
7. Kichu Keechendrm 7. கீசுகீசு என்றும்
Keechu keechu enru engum aanauchaathan kalandhu கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
Pesina Pecharavam kettilyo peyppennay! பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
Kaasum pirappum kalakalapp-k-kai perthu காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
Vaasanarumkuzhal aaichiar maththinaal வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
Osaipadutha thayir aravam kettilayo? ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
Nayaka-p-penn pillai! Naarayanan moorthy நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
Kesavanai-p-paadavum nee kette kidaththiyo! கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?
Thesamudayai Thirav-el or empaavaai தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
8. Kizh vaanam vellendru 8. கீழ்வானம் வெள்ளென்று
Keezh vaanam vellendru! erumai siru veedu கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
Meyvaan paranthana kan! mikkulla pillaikalum மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
Poovan pokinraarai-popokaamal kaathu unnai-k வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்
Koovuvaan vandhu ninrom! kothu kalamudaya கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
Paavaai! ezhunthiraai! paadi-p-parai kondu பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
Maavai-p-pilanthaanai, mallarai maatiya மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
Devaathi dhevanai chenrunaam sevithal தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
Aa Aaa enru aaraindhu arul-el or empaavaai ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.
9. Thoomani Maadathu (thumani madathu) 9. தூமணி மாடத்து
Thoomani maadathu sutrum vilakkeriya தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
Dhoopam kamazha thuyil anai mel kann valarum தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
Maamaan magale! mani-k-kadavam thaalthiravaai! மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்
Maameer! Avalai ezhuppeero! Un magal thaan மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான்
Oomayo? anri-ch-chevido? ananthalo? ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
Ema-p-perum thuyil manthira-p-pattalo? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
Maa maayan, Maadhavan, Vaikuntan, enrenru மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
Naamam palavum navinru-el or empaavaai நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்
10. Notru suvargam 10. நோற்றுச் சுவர்க்கம்
Notru Suvargam puguginra ammanai! நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
Maatramum thaaraaro vaasal thiravaadaar மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
Naatrathuzhaai mudi Naraayana: nammaal நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
Potra-p-parai tharum punniyanal pandorunaal போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்
Kootrathin Vaai veezhnda Kumbakarananum கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
Thotrum unakke perum thuyilthan thandhaano தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
Aatra ananthal udayaai! arumkalame ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
Thetramaai vandhu thira-el or empaavaai தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
11. Katru karavai 11. கற்றுக் கறவை
Katru-k-karavai kanangal pala karandhu கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
Setrar thiral azhiya-ch-chenru seru-ch-cheyyum செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
Kutram onrlladha kovalar tham porkodiye குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!
Putraravu algul punamayile! podharaai! புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்
Sutrathu thozimaar ellarum vandu nin சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
Mutram pugundhu mugil vannan perpaada முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட
Sitraadhe pesaade selva-p-pendaatti nee சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ
Etrukku urangum porul?-el or empaavaai எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
12. Kanaithilam Katrerumai 12. கனைத்திளம் கற்றெருமை
Kanaithu ilam katrerumai kanrukku irangi கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
Ninaithu mulai vazhiye ninru paal sora நினைத்து முலை வழியே நின்று பால்சோர
Nanaithu illam serarkkum narchelvan thangaai! நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
Panithalai veezha nin vaasal kadai-patri பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
Sinathinaal then ilangai-k-komaanai-ch-chetra சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
Manaththukkiniyaanai paadavum nee vaaithiravaai! மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்
Iniththan ezhundiraai, eethenna peruakkam! இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!
Anaithu illaththuaarum arindhu-el or empaavaai அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
13. Pullinvai keendanai 13. புள்ளின் வாய் கீண்டானைப்
Pullinvaai keendaanai-p-pollar arakkanai புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
Killikkalainthaanai-k-keerthimai paadi-p-poi கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
Pillaikal ellarum paavai-k-kalam pukkaar பிள்ளைகள் எல்லாரும்  பாவைக் களம்புக்கார்
Velli ezhundhu viyazham urangitru வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
Pullum silambina kaan podhari-k-kanninaai! புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
kullak-kulira-k-kudaindhu neeraadaathe குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
Palli-k-kidathiyo! Paavaai Nee nannaalaal பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்
Kallam thavirundhu kalandhu-el or empaavaai கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
14. Ungal puzhakkadai 14. உங்கள் புழக்கடை
Ungal puzhai-k-kadai-th-thottathu vaaviyul உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
Sengazhuneer vaai negizhndhu aambal vaai koombina kaan செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
Sengal podi-k-koorai vennpal thavathavar செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
Thangal thirukkoil sangiduvaan poginraar தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
Engalai munnam ezhuppuvaan vaai pesum எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
Nangaai! Ezhundiraai! Naanaadhai! Naavudayai! நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
Sangodu chakkaram endhu thadakkaiyan சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
Pangaya-k-kannanai-p-paadu-el or empaavaai பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
15. Elle Ilam Kiliye 15. எல்லே இளம்கிளியே
Ellay! Illam Kiliye! Innam urungudhyo! எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?
Chill enru azhayen min Nangaimeer! Podharukinren சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
Vallai un katturaikal pande un vaai arithum வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
Valleergal neengale! Naanthan aayiduga! வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக
ollai nee podaai, unakkenna verudayai ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
Ellarum pondhaaro? Pondhaar pondhu ennikkol எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
Vallaanai-k-konraanai, maatraarai maatrazhikka வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
Vallaanai Mayanai-p-paadu-el or empaavaai வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
16. Nayaganai ninra 16. நாயகனாய் நின்ற
Naayaganai ninra Nadagopanudaya நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
Koil Kaappaane! Kodi thonrum thorana கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
Vaayil kaappaane! Mani-k-kadavam thal thiravaai வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
Aayar sirumiyaromukku arai parai ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
Maayan Manivannan, nennale vaai nerndhaan! மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
Thooyomaai vandhom, thuyil ezha-p-paaduvaan தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
Vaayal munnam munnam maatraadhe amma! Nee வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
Neyanilai-k-kadhavam neeku-el or empaavaai நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
17. Ambarame Thannere 17. அம்பரமே தண்ணீரே
Ambaramay, thanneeray, soray aram seyyum அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
Emperumaan! Nandagopaala! Ezhundhiraai! எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
kombanaar-k-kellam kozhunday kulavilakkay கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
Emperumaatti! Yosodhaai! Arivuraai! எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்
Ambaran oodaruththu ongi ulagalandha அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த
Umberkomanne! Urangaadhu ezhundhiraai! உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
Semborkk-kazhaladi-ch-chelvaa! Baladeva! செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
Umbiyum neeyum urang-el or empaavaai உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.
18. Undhu madhakalitran 18. உந்துமத களிற்றன்
Undhu madhakalitran, odhaadha thol valiyan உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
Nandagopalan marumagale! Nappinnai! நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
Gandham kamazhum kuzhalee! Kadai thiravaai? கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்
Vandhengum kozhi azhaithana kaann! Maadhavi-p- வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
Pandalmel palkaal kuyilinangal koovina kaan பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
Pandhaar virali! Un maiththunan per paada-ch- பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்
Chenthaamarai-k-kaiyaal seeraar valai olippa செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
Vandhu thiravaai magizhundhu-el or empaavaai வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
19. Kuthu Vilakeriya (Kuthu vilakku Eriya) 19. குத்து விளக்கெரிய (குத்து விளக்கு எரிய)
Kuthuvilakkeriya-k-kottukkaal kattil mel குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
Methnra pancha sayanathin meleri மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
Koththalar Poonkuzhal Nappinnai kongaiymel கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
Viththu kidantha malar maarbha! vaai thiravaai! வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
Maiththadam kanninnaai, nee un manaalanai மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
Ethanai podhum thuyilezha vottaai kaan எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
Ethanai elum pirivaatrakillaaiyaal எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்
Thathuvamanru thagav-el or empaavaai தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
20. Muppathu Moovar (Muppathu muvar) 20. முப்பத்து மூவர்
Muppaththu moovar amarar-ku-munsenru முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
Kappam thavirkkum kaliye! Thuyilezhaai! கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்
Seppamudayaai! Thiraludayaai! Settraarku செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
Veppam kodukkum vimalaa! Thuyilezhaai! வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
Seppanna menmulai-ch-chevvaai-ch-chirumarungal செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
Nappinnai nangaai!Thiruvey! Thuyilezhaai! நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
Ukkamum thattoliyum thanthun manaalanai உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
Ippothe emmai neer att-el or empaavaai இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
21. Etra Kalangal 21. ஏற்ற கலங்கள்
Yetra kalangal ethir pongi meethalippa ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
Maatraadhe paal soriyum vallal perum pasukkal மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
Aatra-p-padaithaan magane! arivuraai! ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
Uuttramudayaai!Periyaai! Ulaginil ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
Thotramaai ninra sudare! thuzhilezhaai! தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
Maatraar unakku valitholaindhu un vaasarkann மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
Aatraathu vandhu unnadi paniyumma poley ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே
Pottriyaam vandhom pugazhndu-el or empaavaai போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
22. Anganmaa Gnalathu 22. அங்கண்மா ஞாலத்து
Anganmaa gnaalaththarasar abhimaana அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
Bangamaai vandhu nin palli-k-kattil keezhay பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
Sangam iruppaar pol vandhu thalaip-peydhom சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
Kinkini vaai seidha thaamarai poo-p-poley கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
Sengansiru-ch-chiridhey emmel vizhiyaavo! செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?
Thingalum aadhityanum ezhundaar pol திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
Angann irandum kond engal mel nokkudhiyel அங்கண் இரண்டும் கொண்டு  எங்கள்மேல் நோக்குதியேல்
Yengal mel shaapam nirandhe-el or empaavaai எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
23. Maari malai muzhanjil 23. மாரி முலை முழஞ்சில்
Maarimalai muzhainjil manni-k-kidandhurangum மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
Seeriya Singam arivuttru-th-thee vizhiththu சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
Verimayirponga eppaadum perndhthari வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
Moori nimirndhu muzhangi-p-purappattu மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
Podharuma poley nee poovai-p-poovanna! Un போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
Koil ninru ingane pondharuli koppudaya கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
Seeriya singaadhanath-thirundhu yam vandha kaariyam சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த
Aaraindhu arul-el or empaavaai காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
24. Anru ivvulagam 24. அன்று இவ்வுலகமளந்தாய்
Anru ivvulagam alandhaai adi potri! அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
Senru angu then ilangai settrai! thiral potri! சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
Ponra-ch-chakatam udaiththaai pugazh potri! பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி
Kanru kunilaai erindhaai! kazhal potri! கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
Kanru kudayaai eduthaai gunam potri! குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
Venru pagai kedukkum nin kaiyil vel potri! வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
Enrenru un sevakame eththi-p-parai kolvaan என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
Inru yaam vandhom irangu-el or empaavaai இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்
25. Oruthi Maganai Pirandhu 25. ஒருத்தி மகனாய்
Oruththi maganaai-p-pirandhu or iravil ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
Oruththi maganaai oliththu valara ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
Tharikkilaanaagi-th-thaan theengu ninaindha தரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த
Karuththai pizhai-p-piththu kanjan vayittril கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
Neruppenna ninra nedumaley! unnai நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
Aruththuthu vandhom parai tharudhi yaagil அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
Thiruththakka selvamum sevakamum yaampaadi திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
Varuththamum theerndhu magizhndhu-el or empaavaai வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
26. Maaley! Manivanna!! 26. மாலே! மணிவண்ணா!!
Maaley! Manivanna! Maargazhi neeraaduvaam மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
Melaiyaar seivanangal venduvana kettliyel மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
Gnalath-thai ellam nadunga muralvana ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
Paalanna Vannathu un Paanchajanyamey பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
Polvana sangangal poi-p-paadu udaiyanave போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
Saalap-preum paraiyey pallaandu isaipparey சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
Kola vilakkey kodiyey vidhaaname கோல விளக்கே கொடியே விதானமே
Aalin ilayai! arul-el or empaavai ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
27. Koodadarai vellum (Kudarai vellum) 27. கூடாரை வெல்லும்
Koodaarai vellum seer Govinda! Unrannai கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
Paadi-p-paraikondu yaamperu sammaanam பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
Naadu pugazhum parisinaal nanraaga நாடுபுகழும் பரிசினால் நன்றாக
Choodagame thol valaye thoday sevi-p-poovay சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
Paadagame enranaya palkalanum yaam anivom பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
Aadai uduppom adhanpinnay paar choru ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
Mooda nei peidhu muzhangai vazhivaara- மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
Koodi irundhu kulirndhu-el or empaavaai கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
28.Karavaigal Pin Chenru 28. கறவைகள் பின்சென்று
Karavaigal pinsenru gaanam serndhu unbhom கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
Arivonrum illaadha aai-kulaththu unrannai அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
Piravi Perunthanai punniyam yaamudaiyom பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
Kurai onrum illadha Govindaa! Un rannodu குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
Uravel namakku ingu ozhikka ozhiyaadhu உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
Ariyaadha pillaikalom anbinaal unrannai அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
Siruper azhaiththanavum seeri arulaadhe சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
Iraivaa! Nee thaaraai parai-el or empaavaai இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
29. Chitram Chiru Kale 29. சிற்றஞ் சிறுகாலே
Sittran sirukaale vandhu unnai seviththu un சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
Pottraamarai adiye pottrum porul kelaai பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
Pettram mayththunnum kulaththil pirandhu nee பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
Kuttreval engalai kollamal pogaathu குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
Ittrai parai kolvaan anru kaann Govindaa! இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
Ettraikkum azh-azh piravikkum un thannoda எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
Uttrome yaavom unakke nam aatcheivom! உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
Mattrai nam kaamangal maattru-el or empaavaai மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
30. Vanga Kadal Kadanthu 30. வங்கக் கடல் கடைந்த
Vanga-k-kadal kadaindha maadhavaani kesavanai வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
Thingal thirumugathu seyzhayaar senru irainji திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
Anga-p-paraikonda aattrai ani puduvai அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
Painkamala thanntheriyal pattar piraan kothai sonna பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
Sangath-thamizhmaalai muppadum thappaame சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
Ingi-p-parisuraippaar eerirandu maalvarai-th-thool இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
Senkam thirumugaththu selvaththirumaalaal செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
Engum thiruvarul petru inburuvar empaavaai எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்
Kothai Piranthavoor Govindan VaazhumUr
கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
SothimaNi maadam thOnrumUr –neethiyAl சோதி மணிமாடந் தோன்றுமூர் – நீதியால்
nalla patthar vaazhumUr nAnn maRaihaLOthumUr நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
VilliputthUr VedakkOnUr வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.
Paathahangal theerkkum Paramandi Kaattum
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
vedam anaitthukkum vithAhum- Kothai Tamizh வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
Iyainthumainthum aRiyAtha maanidarai ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
vyaam sumappathum vampu வையம் சுமப்பது வம்பு
ThiruvAdippUratthu sehatthuthitthAL VaazhiyE
திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
ThiruppAvai muppathum seppinAL VaazhiyE திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
PeriyAzhwAr peRReduttha peNN piLlai vaazhiyE பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
PerumbhUthUr mmamunikkup-pinnAnAL vaazhiyE பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
oru NooRRu nARpatthu moonRu uraitthAL vaazhiyE ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே
UyarangarkkE kaNNIuhanthaLitthAl VaazhiyE உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
maruvAruntirumalli vaLa naadi vaazhiyE மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
van Puthuvai naharkkOthai malarpadhangal VaazhiyE வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே

 

 

 

Tags: Thiruppavai | திருப்பாவை | திருப்பாவை தமிழ் | Thirupaavai in Tamil | Thiruppavai lyrics in tamil | Thiruppavai tamil text | Thiruppavai Audio | Thiruppavai download | Margazhi thingal madi niraindha nannalal |

 

 

 

godaddy analytics

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *