சளி இருமல் காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்

சளி இருமல் காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்

சளி,கபம், நெஞ்சு சளி,  குணமாக

  • வேப்பிலையுடன் ஓமவல்லி இலையை அரைத்து நெற்றியில் தடவிவர சளி சரியாகும்
  • தூதுவளை, ஆடாதோடா, கண்டங்கத்திரி இலையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கஷாயம் செய்து தேனுடன் கலந்து சாப்பிட, நாள்பட்ட கட்டிய சளியும் கரையும்.
  • கருந்துளசியை  பிழிந்து, சாரு எடுத்து, தினமும் காலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட சளி – கபம், மார்பு சளி குணமாகும்.
  • ஆடாதோடா இலையை போடி செய்து தேன்கலந்து தினமும் சாப்பிட்டு வர, இருமல் சளி நிற்கும்
  • கடுக்காய் பொடியுடன் நெல்லி பொடியையும் கலந்து தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம் நீங்கும்.
  • குழந்தைகள் சளியினால் மூச்சு விட சிரமபட்டால், சிறிது தேங்காய் எண்ணெய் மூக்கில் தடவிட, சிரமம் குறையும்
  • அமுக்கிராங்கிழங்கு பொடி செய்து, தினமும் இரவில் பாலுடன் சாப்பிட்டு வந்தால்,கபம் போகும்
  • தூதுவளை ரசம் அல்லது தூதுவளை சூப் குடித்தால் சளி போய்விடும்
  • தேங்காய் எண்ணையை  கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவினால், நெஞ்சு சளி குணமாகும்.
  • ரோஜா பூவை முகர்ந்து பார்த்தல் மூக்கடைப்பு நீங்கும்
  • அருகம்புல் சாரு சளிக்கு மிகவும் நல்லது.
  • மாதுளம் பழம் சளிக்கு மிகவும் நல்லது. மாதுளம் பழச்சாறை எலுமிச்சம் சாருடன் கலந்து சாப்பிட்டால் சளி சரியாகும்.
  • கற்பூரவள்ளி இலையை சூடாக்கி, நெற்றியில் பற்று போட்டால், நெற்றியில்
  • கோத்திருக்கும் நீர் வெளியேறும்

காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்

  • நிலவேம்பு குடிநீர் அணைத்து விதமான காய்ச்சலையும் குணபடுத்தும்.
  • ஈர பசையுடன் உள்ள வேப்பமர பட்டையை இடித்து அதில் கால் பங்கு சீரக பொடியுடன் பசும்பாலில் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
  • திப்பிலியுடன் , குப்பைமேனி செடியை பொடிசெய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் சரியாகும்
  • துளசி, வில்வ இலை, வெப்ப இலை, சந்தனம், கடுக்காய், மிளகு, சிற்றரத்தை ஆகியவை பொடியாக அரைத்து காயவைத்து கொண்டால், காய்ச்சல் வரும் சமயம் 1 தேக்கரண்டி வென்னீரில் கலந்து காலை மாலை குடித்து வர, சுரம் குணமாகும்
  • வேப்பிலையை வறுத்து  அடியில் வைத்து படுத்தால், சுரம் போய்விடும்.
  • உத்தாமணி-வல்லாரை இலைகளை மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால், காய்ச்சல் சரியாகும்.

சளி இருமல் குணமாக சித்த வைத்தியம்

  • சீரகத்தை வறுத்து பொடிசெய்து, கல்கண்டுடன் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
  • பொன்னாரை விதையை பசும்பால் விட்டு நன்றாக அரைத்து குழந்தைக்கு கொடுத்து வர, கக்குவான் இருமல் சரியாகும்.
  • நாட்பட்ட இருமல் நிற்க, முற்றின வெண்டைக்காயை சூப் பண்ணி சாப்பிட்டால், சிறிது சிறிதாக குணம் ஆகும்
  • சுக்கு மிளகு திப்பிலி சம அளவில் கலந்து போடி செய்து தினமும் 3 வேலை தேனுடன்  கலந்து சாப்பிட தொண்டை வலி சரியாகும்.

மூச்சிறைப்பு குணமாக சித்த வைத்தியம்

  • விஷ்ணுகிராந்தி பொடியை வென்னீரில் கலந்து சாப்பிட்டால், சளியினால் வரும் மூச்சிறைப்பு  சரியாகும்.
  • கரிசலாங்கண்ணி இலையை அரிசி திப்பிலியுடன் பொடி செய்து சாப்பிட, கபத்தினால் வரும் மூச்சிறைப்பு சரியாகும்.

 

Share

2 thoughts on “சளி இருமல் காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்

  1. நல்ல நல்ல மூலிகை மருத்துவம் சார்ந்த குறிப்புகள் கொடுப்பதற்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *